Sunday, May 18, 2014

இதை கேக்க யாருமே இல்லையா



2004ல வந்த “கிரி”ன்ற படத்துல வில்லன் ஆன்ந்தராஜ், “உனக்கு எவ்வளவு தைரியம். எங்க எடத்துக்கு தனியா வருவே?”ன்னு கேக்கறாரு.
அதுக்கு ஹீரோ அர்ஜுன் ஒரு வசனம் பேசறாரு “ சிங்கம் தனியா தான் வரும். பன்னிங்க தான் கூட்டமா நிக்கும்”ன்றாரு.



ஆனா இதுக்கப்புறம் 2007ல வந்த சூப்பர் ஹிட் “சிவாஜி” படத்துல இதே வசனத்தை பட்டி பாத்து டிங்கரிங் செஞ்சு “கண்ணா, சிங்கம் சிங்கிளா தான் வரும், பன்னிங்க தான் கூட்டமா வரும்”ன்னு ரஜினி வாயால பேச வச்சு உலக புகழ் பெற வச்சிட்டாங்க !!

இந்த உல்டாலக்கடி வேலைய செஞ்சது, சிவாஜி படத்டோட வசன்கர்த்தா சுஜாதாவா இல்லை டைரக்டர் சங்கரா..

இதை யாரும் கவனிக்கலையா... இல்ல கேக்கலையா !!

Saturday, May 17, 2014

ஒரு நிரந்தர முதல்வரின் மன ஓட்டம்





”10 மணி நேரம் கரண்ட்டே குடுக்கலை, பால் வெலைய ஏத்துனோம், பஸ் டிக்கட்டு வெலய ஏத்துனோம், மத்த வெல வாசி எல்லாம் கூடி தான் போய் கிடக்கு. திருப்பூர்ல, கோயம்ப்புத்தூர்லன்னு நெறைய வேலை இல்லாம சுத்தி வர்றாங்க.

அப்பப்ப ரெஸ்ட் எடுக்க கொடநாடு போயிடறோம், யாரவது ஏதாவது பேசுனா உடனே பதவிய உட்டு தூக்கிடறோம், நம்பள விட வயசானவங்க நம்ம காலுல விழுந்தாலும் நாம தடுக்கறது இல்ல.

ராஜீவ் காந்தி கேஸுல தூக்கு தண்டனை கைதிங்க நெலமை என்ன ஆவும்ன்னே தெரியாது, நம்ம சொத்து குவிப்பு கேஸு முடிவு எப்படி இருக்கும்ன்னு தெரியல.




இந்த தொன்னூறு வயசான மனுஷன் ஊர் ஊரா ட்ரெயின்ல, கார்ல போய் பிரச்சாரம் பண்ணாரு. அவரு புள்ள ராத்திரி பகலு பாக்காம பிரச்சாரம் பண்ணாரு. நாம சொகுசா ஹெலிக்காப்ட்டர்ல பறந்து போய் பிரச்சாரம் பண்ணோம். ஆனா அவங்கள மொத்தமா கவுத்து உட்டுட்டாங்க. ஒரு எடத்துல கூட ஜெயிக்க முடியலை.

இந்த வை.கோ. ஊர் ஊரா கால் கடுக்க நடந்து, வாய் வலிக்க பேசினாரு. பூரா பயலும் கையா தட்டுனாங்க. ஆனா, ஓட்டுப் போடறப்ப, அவரு கட்சி சின்னம் எதுன்னே தெரியாம, நம்பளுக்கே ஓட்டைப் போட்டு ஜெயக்க வச்சிட்டாங்க.

ஒரு தொகிதியில அதிக பட்ச சதவீதம் மக்கள் ஓட்டுப் போட்டாங்கன்னு பெருமை பட்டா, பூரா பேரும் ஜாதி ஜாதின்னு பேசிக்கிட்டே இருந்தவங்கள நம்பி ஓட்டை குத்தி, ஒரு ஆளை ஜெயிக்க வச்சிட்டாங்க.



போன சட்டமன்ற தேர்தல்ல நம்பக் கூட கூட்டு வச்ச, இந்த வெள்ளை மனசு(??) விஜயகாந்த் கட்சி, ஒரு தொகுதியிலே கூட ஜெயிக்கலையாம். என்ன மக்களுய்யா !! அதுக்குள்ளயா, ஒரு கட்சிய இம்புட்டு வெறுத்து போகும். அவரு குடிக்கறாருன்னு சொல்லி சொல்லியே, அவரை இந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கிற மாதிரி பண்ணிட்டோம்.



ஆனா, எல்லா ஒயின்ஸ் கடையையும் நம்ப அரசாங்கமே எடுத்து நடத்திக்கிட்டு இருக்கோம். தமிழ்நாட்டு மக்கள் தொகையிலே பாதி பேரை குடிகாரனா ஆக்கி உட்டுட்டோம். அவனவன் தேர்தல் அன்னைக்கு குடிச்சிட்ட்டு வந்து தான் ஓட்டே போட்டாங்க. இத்தனை பேரு குடிக்கராங்க, ஆனா அவரு குடிக்கராருன்னு சொன்னதை வச்சி அவரு கட்சி ஆளுங்களுக்கு ஓட்டுப் போடலை.
ஓடி ஓடி வந்த மோடிய நம்பாம, அவங்க கட்சிக்கு கூட ஒரே ஒரு தொகுதியில மட்டும் தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருக்காங்க.


இந்தப் பெரிய மனுஷன் மோடிய வேற, தேர்தல் பிரச்சாரத்தப்ப, கொஞ்சம் அதிகப்படியா பெசிட்டோம். அவுங்க கட்சி இத்தனை இடத்துல ஜெயிக்கும்ன்னு நாம என்னத்த கண்டோம். அதை மனசுல வச்சிக்கிட்டு இந்த சொத்துக் குவிப்பு கேசுல ஏதாவது சுத்தல்ல உட்டுடுவாங்களோ?

நம்ப நெலைமை இந்த இன்ஜியரிங் படிச்ச பசங்க மாதிரி ஆகிப் போச்சி. ஃபர்ஸ்ட் கிலாஸ்ல பாஸ் பண்ணி இருந்தாலும் நினைச்ச வேலை கிடைக்காத மாதிரி, 37 சீட்டுல ஜெயிச்சி இருந்தாலும், மந்திரி சபையில நமக்கு இடம் கிடைக்காது.

கரண்ட்டுக்கும், குடிக்கிற தண்ணிக்கும் நாம கர்நாடகாவையும், கேரளாவையும் நம்பி இருக்கோம். அவங்க எதாவது கொடைச்சல் குடுத்துக் கிட்டே தான் இருப்பாங்க. மந்திரி சபையில இடம் இல்லாம, ஆட்சியில பங்கு இல்லாம செண்ட்ரல் கவர்மெண்ட்டை மெரட்ட முடியாது.
அந்த மோடி வெற நம்பள மாதிரியே எடக்கு மொடக்கு பண்ற ஆளா தெரியிறாரு. இவரை முறைச்சிக்கிட்டு ஆட்சி பண்ண முடியாது. இவரு தயவில்லாம கேரளா, கர்நாடகா கிட்ட தண்ணி பிரச்சனைய தீக்க முடியாது. என்ன பண்றது?



இந்த தமிழ்நாட்டு பயபுள்ளைங்க எதோ ஒரு பெரிய ப்ளானோட தான் நமக்கு ஒட்டு மொத்த  ஓட்டையும் போட்டிருக்காங்கன்னு நெனைக்கறேன்.
இதுக்கு மேலயும் கரண்ட் குடுக்காம ஏமாத்த முடியாது. ‘தீய சக்தி, ஆதி பராசக்தி’ன்னு கதை எதுவும் உட முடியாது. ஏதாவது உடனடியா செஞ்சாவனும். சரக்கு எவ்வளவு வேணும்னாலும் ஒடனே தயாரிச்சுப் போடறாங்க. ஆனா இந்தக் கரண்ட்டை அது மாதிரி ஒடனே தயாரிக்க முடியாதாமே. இது தெரியாம நாம வேற போன தேர்தல்ல, மூணே மாசத்துல கரண்ட் பிரச்சனைய தீக்கறோம்னு சவால் உட்டோம். இப்ப மூணு வருஷம் உருண்டோடி போச்சு.

இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள சட்டமன்ற தேர்தல் வருது. அதுக்குள்ள எல்லாப் பிரச்சனையும் தீக்கலன்னா, ஓட்டை மாத்தி குத்திப் புடுவாங்க.

இந்த மக்கள் வேற சாஞ்சா சாயற பக்கம். ஒரே கட்சிக்கு தான் ஓட்டை போடுவாங்க. அப்புறம் நம்ம மேல கடுப்பாகி, எல்லா ஓட்டையும் தி.மு.க.வுக்கு குத்திடுவாங்க.

அவங்களும் ஒன்னும் பெரிசா செஞ்சுட முடியாதுன்றது வேற விஷயம். ஆனா இந்த கூமுட்டை மக்களுக்கு இது தெரியாது. நமக்கு இல்லன்னா அவங்களுக்கு, அவங்க இல்லன்னா நமக்குன்னு, மாத்தி மாத்தி ஓட்டை போட்டுக்கிட்டு தான் இருப்பாங்க. அவங்கள விட்டா எங்களுக்கும் வேற கதி இல்ல, அவங்களுக்கும் வேற விதி இல்ல.



இந்த தடவை ஹெலிக்காப்டர்ல போயி “செய்வீர்களா, செய்வீர்களா” கேட்டு ஓட்டு வாங்கி ஜெயிச்ச மாதிரி, அடுத்த தேர்தலுக்குள்ள ஒரு குட்டி ஏரோப்ப்ளானை வாங்கிடனும். அதுல போயி எஙகளுக்கு ஓட்டு “போடுவீர்களா போடுவீர்களா!!” கேட்டா போட்டுட்டு போயிடுவாங்க.

என்னா ஒன்னு அடுத்த தேர்தலுக்குள்ள, இன்னும் ஒரு 2000 புது டாஸ்மாக்கை தொறந்து விட்டு, இருக்கிற மிச்ச சொச்ச பயலுவலையும் குடிக்க வச்சிட்டாப் போதும்.

அப்புறம் ஒரு ஓட்டுக்கு இரநூறு, இல்லை ஒரு முந்நூறு ரூபாய தட்டி விட்டாப் போதும். அடுத்த முதல்வரும் நாம் தான், அடுத்த பிரதமரும் நாம தான்.

# இப்போதைக்கு இது தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஜெயலலிதா மன ஓட்டமாக இருக்கும்.